![]()
மரண அறிவித்தல்
திரு.சின்னையாபஞ்சலிங்கம் (பஞ்சையா) மண்ணில் - 07/08/1950 விண்ணில் - 09/02/2021 திருப்பூர் ஒன்றியம் பிரான்சு கிளையின் பெருமதிப்பிற்குரிய தலைவர் பஞ்சலிங்கம் ஐயா 09.02.2021 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார். யாழ். மயிலிட்டி திருப்பூர் ஒன்றியத்தை சொந்த இடமாகவும், பிரான்சை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு. சின்னையா பஞ்சலிங்கம் அவர்கள் 09/02/2021 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். அன்னார் காலம் சென்ற சின்னையா இராசம்மா தம்பதியரின் அன்பு மகனும், அமரர்களான கந்தசாமி, இராசதுரை, சுப்பிரமணியம், இலட்சுமியம்மா, நாகமுத்து, அமிர்தலிங்கம் (கட்டப்பொம்மன்) மற்றும் பாக்கியவதி (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.
அன்னார் வில்வராணி (வெள்ளையம்மா-பிரான்சு) அவர்களின் அன்புக்கணவரும், காண்டீபன் (டென்மார்க்), பார்த்தீபன் (கனடா), பிரதீபன் (பிரான்சு), லோகநாயகி (கௌசி - பிரான்சு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்.
லீனா, ரதீஸ், ரஜீதா, தர்சினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும், சாற, சீலஸ், மலிக், பிரவின், பிரித்திகா, ரக்சி, ரக்சனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இத்தகவலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். அமரர் சின்னையா பஞ்சலிங்கம் அவர்களின் ஆத்மா சிவப் பரம்பொருளின் திருவடி நிழலில் அமைதிபெற எல்லாம் வல்ல பேச்சி அம்மாளை வேண்டுகிறோம். மேலதிக விபரம் பின்னர் அறியத்தரப்படும். தகவல் குடும்பத்தினர். தொடர்புகளுக்கு : வில்வராணி - மனைவி (பிரான்ஸ்) +33981759847 பார்த்தீபன் - மகன் (கனடா) +14372449582 காண்டீபன் - மகன் (டென்மார்க்) +4571447528 பிரதீபன் - மகன் (பிரான்ஸ்) +33753541270 ரதிஸ் - மருமகன் (பிரான்ஸ்) +33613777175 கௌசி - மருமகள் (பிரான்ஸ்) +33768367642 வெளியீடு ஊடகப்பிரிவு திருப்பூர் ஒன்றியம் -மயிலிட்டி பிரான்சு கிளை 09.02.2021
இறுதிக்கிரியை தொடர்பான அறிவித்தல்
அமரர் சின்னையா-பஞ்சலிங்கம் அப்பையாவின் இறுதிக்கிரியைகள் தொடர்பான அறிவித்தல்! கடந்த 09/02/2021 அன்று பிரான்சில் சுகவீனம் காரணமாக காலமான அமரர் சின்னையா-பஞ்சலிங்கம் அப்பையாவின் இறுதிக்கிரியைகள் நாளை புதன் கிழமை (17/02/2021) பிரான்சில் நடைபெறுகிறது. ஐரோப்பிய நேரம் பகல் 11.30 - 12.30 வரை (இலங்கை நேரம் மாலை 4.00 - 5.00 வரை)உறவுகளின் இறுதி வணக்கத்திற்காக வைக்கப்பட்டு தகனம் செய்யப்பட உள்ளது. இதேவேளை சமய சம்பிரதாய முறைப்படி மேற்கொள்ளப்படும் அன்னாரது இறுதிக் கிரியைகள் நாளை புதன் கிழமை (17/02/2021) பிரான்சில் இடம்பெற்று உறவுகளின் வணக்கத்திற்காக ஒரு மணிநேரம் வைக்கப்பட்டு பின்னர் தகனம் செய்யப்பட உள்ளது. குறித்த இறுதிக் கிரியைகள், lankasri, ibcதமிழ் மற்றும் tamilwin ஆகிய வலைத்தளங்களினூடாக நேரலை வழங்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நேரலை (LIVE) நேரம்.... ஐரோப்பிய நேரம் காலை 08.30 - 12.30 வரை (இலங்கை நேரம் மதியம் 01.00 - 5.00 வரை) தற்கால கொரோனா சூழ்நிலை காரணமாக இறுதி நிகழ்வில் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையில் பங்கேற்கவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பங்கேற்கும் நெருங்கிய உறவினர்கள் சுகாதார-பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி ஒத்துழைக்கவும். ஆகவே பிரான்சு வாழ் அன்பு உறவுகள் கூடியவரை நேரில் கலந்துகொள்வதனை தவிர்த்து ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தகவல் குடும்பத்தினர். நேரலை இணைப்பு.... https://www.ripbook.com/77512433/notice/115434 ![]()
துயர் பகிர்வோம்
தி௫ப்பூர் மண் பெற்றெடுத்த பெ௫மதிப்புக்குரிய மண்ணின் மகன்: பஞ்சஐயா உங்களுக்கு சுகவீனம் என்றதும் கடவுளை வேண்டினோம் ஆனால் அந்தக் கடவுள் உங்களை தன்னிடம் அனைத்துக்கொண்டு எங்களை தவிக்கவிட்டுவிட்டார். தி௫ப்பூர் மக்கள் சிறுவர் முதல் பெரியோர் வரை உங்களை நினைத்து புலம்புகிறார்கள். குழந்தைபோல் சிரித்தமுகத்துடன் பேசுவது உங்கள் சிரிப்பை யாராலும் மறக்கவேமுடியாது பஞ்சஐயா நீங்கள் தாய்மண்னில் வாழ்ந்த வாழ்க்கை உங்கள் சகோதரர்களோடு சேர்ந்து கடலில் எத்தனை விதமான தொழில்களை செய்து பலமக்களுக்கு தொழில் வாய்ப்புக் கொடுத்தீர்கள். ஊரில் தி௫மணம், கொண்டாட்டம் என்றால் இராசாஐயா, மணிஐயா, பஞ்சஐயா. கட்டைஐயா. நீங்கள் சிரித்துக்கொண்டு வாழ்த்துவீர்கள் மறக்கவேமுடியாது. கோவில் தி௫விழாக்களுக்கு வந்துசிறப்பிக்கிறது தனி சிறப்பு நன்மதிப்பைப் பெற்றுள்ளீர்கள். புலம் பெயர்ந்து பிரான்ஸ்சில் தலைவராக இ௫ந்து, இளைஞர்களையும் பெரியவர்களையும் உங்கள் குழந்தைச் சிரிப்பால் அனைவரையும் கவர்ந்து மறக்காதபடி செய்துவிட்டீர்கள். தாய்மண்னிலும் சரி, இங்கும்சரி, எங்கள் இல்லங்களில் நடக்கும் நற்க்காரியங்களில் முதல்நின்று சரியானமுறையில் நடத்திவைத்து சிரித்தமுகத்துடன் முடித்து வைப்பீர்கள். பஞ்சஐயா: உங்களிடம் கற்றதைக்கொண்டு நாங்களும் வாழ்வோம். உங்கள் ஆத்மா சாந்தி கொள்ள எங்கள் குலதெய்வம் பேச்சி அம்மன் முத்துமாரிஅம்மன் அ௫ள் ஆசி வேண்டி எனது பிள்ளைகள், ம௫மக்கள், பேரப்பிள்ளைகள் நிர்கிறோம். -இராசு தேவிகா குடும்பம்
மயிலிட்டியின் மைந்தரே
திருப்பூர் ஒன்றியத்த்தின் திருவிளக்கே!!! பஞ்சையாவே!!!! தளத்திலும் புலத்திலும் தனித்துவத்துடன் வாழ்ந்து வழிகாட்டிய தங்கமகனே! புலம்பெயர்ந்த இம்மண்ணில் நண்பனுக்கு நண்பனாய் இளையோர்க்கு உதாரண புருசனாய் சபை சந்தியில் சளைக்காத சாமானியனாக நின்று வழிநடத்தும் மாண்பினனாய் வாழ்ந்தவர் ....நீங்கள் வாழ்ந்து கொண்டிருப்பவரும் ...நீங்கள் ஏனோ இறைவன் இடைநடுவில் பறித்துவிட்டான் துன்புற்றோர் துயர்துடைத்து துணைக்கரமாய் அடைக்கலம் தந்த உம்மை ஆண்டவன் ஏன் அழைத்தான் பண்புள்ளோரை பல காலம் வாழ விடக் கூடாது என்றா? ஏது செய்வோம்.. இறைவன் சித்தம் இது இனி காண முடியாத சோக நிலையோடு.. புலம்பெயர்ந்த தேசத்தில் நாமிருந்து ஏங்கியழுகின்றோம்...??? - Jansanthiru சிரித்த முகத்தான் இன்று சிந்தையிழந்ததேனோ செந்தமிழில் சிந்தையிழக்க அரவணைக்கும் செங்கோலன் எம்மைவிட்டு சென்றதேனோ பூவிதழ் புன்னகைவிரிய கண்ட உன்னை கரிமுகம் கொண்ட காலக்கொடியவனும் கரிசனையிழந்து அழைத்ததேனோ புண்பட பேச தெரியாதயுன்னை பூவுலகைவிட்டு அழைத்தது ஏனோ பூவுலகைவிட்டு நீ சென்றாலும் உன் புன்னகைகள் எம் கண்முன் நிழலாக நிரந்தரமாகும் பஞ்சையா -சடாச்சரலிங்கம் சதானந்தன்
இந்தப் பக்கம்
0 Comments
Leave a Reply. |
மரண அறிவித்தல்கள்
|