![]()
மரண அறிவித்தல்
திரு. மார்க்கண்டு சோமேஸ்வரானந்தம் (காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தர், பிரபல உதைபந்தாட்ட வீரர்) தோற்றம்: 16/06/1949 மறைவு: 21/09/2021 யாழ். மயிலிட்டி வீரமாணிக்க தேவன்துறையைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மார்க்கண்டு சோமேஸ்வரானந்தம் அவர்கள் 21-09-2021 செவ்வாய்க்கிழமை அன்று சென்னையில் காலமானார். அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு, குலக்கண்டு தம்பதிகளின் பாசமிகு தவப் புதல்வரும்,
சீதா லஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜானகி(சுவிஸ்), வைதேகி(பிரான்ஸ்), மாதங்கி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், பிரேம்ராஜ், செல்வகுமார், நிரேஷ் ஆகியோரின் மாமனாரும், காலஞ்சென்றவர்களான கருணைக்கிளி, யோகேஸ்வரி மற்றும் தங்கேஸ்வரானந்தம், சுகுனேஸ்வரி, ரகுனேஸ்வரி, பிரேமானந்தம், காலஞ்சென்ற விஜயானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், அமரன், ப்ரியன்(சுவிஸ்), செல்வப்பிரியா(பிரான்ஸ்), காயத்திரி(கனடா) ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 22-09-2021 புதன்கிழமை அன்று மு.ப 09:45 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். வீட்டுமுகவரி: 27A கிருஷ்ணா நகர், 3வது தெரு, போரூர், சென்னை- 600116, தமிழ்நாடு. தகவல்: குடும்பத்தினர்.
இந்தப் பக்கம்
0 Comments
Leave a Reply. |
மரண அறிவித்தல்கள்
|