![]()
மரண அறிவித்தல்
திரு. வினாசித்தம்பி காசிப்பிள்ளை (சின்ராசா) தோற்றம் : 23/02/1934 மறைவு : 20/01/2022 தெல்லிப்பழை விராங்கொடையைப் பிறப்பிடமாகவும், மயிலிட்டி (குளத்தடி) கட்டுவன் வீதியை வாழ்விடமாகவும், நெதர்லாந்தை வதிவிடமாகவும் கொண்ட திரு. வினாசித்தம்பி காசிப்பிள்ளை (சின்ராசா) அவர்கள் 20/01/2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற வினாசித்தம்பி நாகம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சிவகுரு மகேஸ்வரியம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகனும், காலஞ்சென்ற அன்னக்கிளி (அழகுமயில்)அவர்களின் அன்புக் கணவரும், மோகன்தாஸ் (Mohan நெதர்லாந்து Zaandam) அவர்களின் பாசமிகு தந்தையும், சந்திரபவானி (சித்ரா, நெதர்லாந்து Zaandam) அவர்களின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற சிவலிங்கம் மற்றும் மகாலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற சேனாதிராஜா, தங்கராஜா, துரைராஜா, மகாராஜா மற்றும் அம்மன்கிளி, மலர்மணி, அன்னலட்சுமி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும், துசிகா, துசாந்த், கனீஷ்குமார் ஆகியோரின் அன்புப் பேரனும், ஆரியா, அருவியின் அன்புப் பூட்டனாரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 25/01/2022 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10:30 மணிக்கு தொடங்கி 12:30 மணிக்குள் Crematorium Zaanstad, Wibaustraat 282, 1505HR Zaandam இல் தகனம் செய்யப்படும். கொரோனா நோய் தொற்று காரணமாக இறுதிக் கிரியைக்கு வரும் உறவினர்கள் முன்னரே தொடர்புகொண்டு உறுதிப்படுத்துமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றோம். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். தொடர்புகளுக்கு: மோகன் (மகன்) : +31641071234 துசாந்த் (பேரன்) : +31614732422
இந்தப் பக்கம்
|
மரண அறிவித்தல்கள் 2022
பதிவுகள்
December 2022
முழுப்பதிவுகள் |