![]()
ஓராண்டு நினைவு நாள்....
அமரர் திரு. இராசநாயகம் நித்தியானந்தம் தோற்றம்: 17/10/1957 மறைவு: 28/03/2021 மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், சக்கோட்டையை வதிவிடமாகவும் கொண்ட அமரர், இராசநாயகம் நித்தியானந்தம் அவர்களின் ஓராண்டு நினைவுநாள்.
அமரர்
திரு. இராசநாயகம். நித்தியானந்தம். அவர்களின் ஓராண்டு நினைவு நாள்.... 28.03.2022 ******************* ⚘⚘⚘⚘⚘⚘⚘⚘ எம் அண்ணனின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று. வருத்தமோ வலியோ இதயத்தின் காயமோ இன்னும் மாறவில்லை. மனம் ஆறவில்லை. விழி நீர் வற்றவில்லை. ஆனாலும் ஓராண்டு உருண்டோடி விட்டது. கொடிய நோயாய் காலனவன் வந்து உங்களை கொண்டு சென்றானே. உங்கள் நோயை நாங்கள் அறிந்து அதை உணருமுன்பே எம்மை விட்டுப் போய் விட்டீர்கள் அண்ணா. அம்மா அப்பாவை இழந்தும், ஏக்கமில்லாது வருத்தமில்லாது எம்மை உங்கள் அரவணைப்பில் வாழ வைத்தவர் நீங்கள் அண்ணா. இன்று உங்களோடு எங்கள் அம்மா அப்பாவின் இழப்பையும் மீண்டும் நினைத்து நினைத்து அழவைத்து விட்டீர்களே. அண்ணா ... என்றும் உங்கள் பேச்சுதான். உங்கள் இழப்பை இன்னும் நான் ஏற்கவில்லை. உங்கள் நினைவு என்றும் எங்களோடு இருக்கும்.. ஆண்டவரே எம் அண்ணாவின் ஆத்மாவை நித்திய இளைபாற்றித் தாரும். சகோதரி தங்கா (அமலா நோர்வே)
இந்தப் பக்கம்
|
மரண அறிவித்தல்கள் 2022
பதிவுகள்
December 2022
முழுப்பதிவுகள் |