மயிலிட்டி
  Myliddy.org
  • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
  • மயிலிட்டி செய்திகள்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வு
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல்கள் 2021
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பிறந்தநாள்

திருமந்திரம் - பாகம் 39 "சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி"

16/11/2022

0 Comments

 
Picture
திருமந்திரம் ( பாகம் 39 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)

அறம் செய்யார் அடையும் துயர்
​

“எட்டி பழுத்த இருங்கனி வீழ்ந்தன
ஒட்டிய நல்லறம் செய்யாதவர் செல்வம்
வட்டிகொண்டு ஈட்டியே மண்ணின் முகந்திடும்
பட்டிப் பதகர் பயன்அறி யாரே”                                  பாடல் எண் 260

​எட்டிக்காய் மிகவும் கசப்பானது. உண்பவர் உயிரையும் கொல்லும் என்பர். இப்படிப்பட்ட எட்டி மரம் பழுத்தால் என்ன? அந்த மரத்தின் காய்கள் பழுத்துப் பெரிய பழங்களாகத் தரையெல்லாம் கிடந்தால்தான் என்ன? இதனால் யாருக்கு என்ன பயன்? யாருக்கும் இதனால் ஒரு பயனும் இல்லை. இது போன்றதுதான் அறத்தோடு பொருந்திய புண்ணியச் செயல்களைச் செய்யாதவர்கள் செல்வம். அது யாருக்கும் பயன்படாது. வட்டிக்குப் பொருளைத் தந்து, வட்டி பெற்று இவ்வுலகில் செல்வத்தைச் சேர்த்து வைப்பவர்கள் செல்வத்தின் பயன் அறியாப் பாதகர் ஆவர். ​


Read More
0 Comments

திருமந்திரம் - பாகம் 38 "சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி"

24/7/2022

0 Comments

 
Picture
​திருமந்திரம் ( பாகம் 38 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)

தக்கவர்க்குச் செய்தலே தருமம்
“அற்றுநின்றார் உண்ணும் ஊணே அறனென்னும்
கற்றன போதம் கமழ்பவர் மானிடர்
உற்றுநின்று ஆங்கொரு கூவல் குளத்தினில்
பற்றிவந் துண்ணும் பயன்அறி யாரே”                            பாடல் எண் 253

பற்று, பந்தம், பாசம் இவற்றை விட்டொழித்த ஞானிகளுக்கு உணவளிப்பதே மேலான தருமம் என்று நீதி நூல்கள் கூறும். இப்படியிருந்தும் பல நூல் கற்று அறிவு மணம் வீச இருப்பதாகச் சொல்லும் மனிதர்கள், அப்படிப்பட்ட ஞானிகளைப் பார்த்தறிந்து, எங்காவது ஒரு ஆறு குளக்கரைகளில் தியானத்தில் ஈடுபட்டிருப்பதைக் கண்டு, அவர்களை அழைத்து வந்து உண்ணச் செய்வதால் பெறக்கூடிய புண்ணியப் பயனை அறியாமல் இருக்கின்றார்களே! அந்தோ பரிதாபம்!.


Read More
0 Comments

திருமந்திரம் - பாகம் 37 "சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி"

4/3/2022

0 Comments

 
Picture
திருமந்திரம் ( பாகம் 37 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி) 

அமுதம் இருக்க நஞ்சை உண்ணும் அறிவீனம்
“கால்கொண்டு சுட்டிக் கனல்கொண்டு மேலேற்றிப்
பால்கொண்டு சோமன் முகம்பற்றி உண்ணாதோர்
மால்கொண்டு தேறலை உண்ணும் மருளரை
மேல்கொண்டு தண்டஞ்செய் வேந்தன் கடனே”                   பாடல் எண் 246
​
மூச்சுக் காற்றைப் (பிராணவாயுவை) முறைப்படுத்தி, நிறுத்தி, பிராணாயாமம் (மூச்சுப் பயிற்சி) செய்து, மூலாக்கினியை மேலேற்றிச் சந்திர கலையாகிய மூலாதாரத்தில் வடியும் அமுத பானத்தை உண்ணாமல், அறிவு மயங்கிக் கள்ளைக் குடிக்கும் மந்த மதியினரைத் தண்டிக்க வேண்டியது, நாடாளும் மன்னன் கடமையாகும்.


Read More
0 Comments

திருமந்திரம் - பாகம் 36 "சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி"

4/2/2022

0 Comments

 
Picture
திருமந்திரம் ( பாகம் 36 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
​
அரசர்க்கழகு அறநெறி காத்தல்
“நாள்தொறும் மன்னவன் நாட்டில் தவநெறி
நாள்தொறும் நாடி அவன்நெறி நாடானேல்
நாள்தொறும் நாடு கெடும்மூடம் நண்ணுமால்
நாள்தொறும் செல்வம் நரபதி குன்றுமே”                       பாடல் 239

அன்றாடம் அரசன் அவனுடைய நாட்டில் அற ஒழுக்கம் கெடாதிருக்கப் பார்த்துக் கொள்ளவேண்டும். அப்படி அவன் அன்றாடம் அவனுடைய நாட்டில் நீதி முறை சரியாக உள்ளதா என்பதை ஆராய்ந்தறியத் தவறுவானேயானால், அவனுடைய நாடு ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாகக் கெட்டழியும். அறியாமை எங்கும் மிகும். செல்வமும் செல்வாக்கும் நாளும் குறைய, அரசனும் அழிவான்.


Read More
0 Comments

திருமந்திரம் - பாகம் 35 "சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி"

27/12/2020

0 Comments

 
Picture
திருமந்திரம் ( பாகம் 35 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
​
அறிந்தும் அறியாத ஆனந்த நிலை
“திருநெறி யாகிய சித்து அசித்தின்றிக்
குருநெறி யாலே குருபதஞ் சேர்ந்து
கரும நியமாதி கைவிட்டுக் காணும்
துரிய சமாதியாம் தூய்மறை யோர்க்கே”                              பாடல் 232
​
மேலான ஞான மார்க்கமான, அறிவற்று அறியாமையும் விட்டு, ஆச்சாரியன் வழிகாட்டிய உபதேச முறைப்படி, மெஞ்ஞான குருவாகிய பரம்பொருள் திருவடிகளைத் தியானித்துப், புறக் கருமங்களை, சடங்குகளை, செயல்களை ஒதுக்கி விட்டு, உள் ஒளியில் இறைவனைக் காணும் உண்மை மறைப் பொருள் உணர்ந்தோர்க்குத், தூய சமாதி நிலை சித்திக்கும்.


Read More
0 Comments

திருமந்திரம் - பாகம் 34 "சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி"

24/11/2020

0 Comments

 
Picture
திருமந்திரம் ( பாகம் 34 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)

ஒடுக்கம் முடிவு ஓம் என்னும் பிரணவம்
“வேதாந்தம் கேட்க விருப்பொடு முப்பதப்
போதாந்த மான பிரணவத் துள்புக்கு
நாதாந்த வேதாந்த போதாந்த நாதனை
ஈதாம் எனாதுகண்டு இன்புறு வோர்களே”                                          பாடல் 225
​
வேத முடிவான உபநிடதங்களின் உண்மைப் பொருளறிய ஆசைப்பட்டு, முப்பதமான அகர, உகர, மகரமாக, அறிவின் எல்லையான (போதாந்தமான) “ஓம்” என்னும் பிரணவத்துள் நின்று, நாதாந்த (ஒலி), வேதாந்த (வேதத்தின் முடிவு), போதாந்தத் (ஞானம்) தலைவனாக விளங்குகின்ற சிவப்பரம்பொருளே (சிவமே) எல்லாவற்றிற்கும் முடிவென்று கண்டு இன்புறுவார்கள்.


Read More
0 Comments

திருமந்திரம் - பாகம் 33 "சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி"

27/3/2020

0 Comments

 
Picture
திருமந்திரம் ( பாகம் 33 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
​
மயங்கித் தவிக்கும் மனித வாழ்வு
“போதிரண்டு ஓதிப் புரிந்தருள் செய்திட்டு
மாதிரண் டாகி மகிழ்ந்துஉட னேநிற்கும்
தாதிரண் டாகிய தண்ணம் பறவைகள்
வேதிரண் டாகி வெறிக்கின்ற வாறே”                                 பாடல் 217
​
காலை மாலை ஆகிய இரு வேளையும் வேதம் ஓதி வேள்வி செய்தால் குண்டலினி (மூலாதாரம்) மேலோங்கிச் சிவசக்தியாய் நிற்கும். இருவருடைய உயிர்ச் சத்து (சுக்கிலம், சுரோணிதம்) கலப்பால் உடல் இரண்டு சிறகடித்து வானில் பறப்பது போலிருக்கும். ஆணும் பெண்ணுமாகிய பறவைகள் இதனால் மாற்றம் அடைந்து மயக்கம் கொள்ளும்


Read More
0 Comments

திருமந்திரம் - பாகம் 32 "சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி"

28/2/2020

0 Comments

 
Picture
​திருமந்திரம் ( பாகம் 32 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
​
அருட்செல்வம் – அதைத் தேடுவீர்
“பொய்க்குழி தூர்ப்பான் புலரி புலருதென்று
அக்குழி தூர்க்கும் அரும்பண்டம் தேடுவீர்
எக்குழி தூர்த்தும் இறைவனை ஏத்துமின்
அக்குழி தூரும் அழுக்கற்ற போதே”                                   பாடல் 210

சூரியன் உதித்துக் காலைப் பொழுது விடிந்ததுமே வயிற்றுப் பசியை அடக்க அரிய பொருட் செல்வத்தைத் தேடுவீர்கள். எந்தக் குழியை நிரப்பினாலும் இறைவன் புகழை மறவாது போற்றுங்கள். போற்றினால் மன அழுக்கு அகலும். அழுக்ககன்றவுடன் அப்பிறவிக் குழி தானே மூடிவிடும்.


Read More
0 Comments

    சைவசித்தாந்த ரத்தினம்
    ​நாகேந்திரம் கருணாநிதி

     

    பதிவுகள்​

    November 2022
    July 2022
    March 2022
    February 2022
    December 2020
    November 2020
    March 2020
    February 2020

    அனைத்துப் பதிவுகள்

    All

Picture
நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்
hit counter
Copyright © 2023