• நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
  • மயிலிட்டி செய்திகள்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வு
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல்கள் 2021
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பிறந்தநாள்
  • காணிக்கை மாதா தேவாலயம்
Myliddy.org
மயிலிட்டி

திருமந்திரம் - பாகம் 41 "சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி"

26/4/2024

0 Comments

 
Picture
திருமந்திரம் ( பாகம் 41 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)

அன்பு செய்வார்க்கே இன்ப நிலை
என்அன்(பு) உருக்கி இறைவனை ஏத்துமின்
முன்அன்(பு)உருக்கி முதல்வனை நாடுமின்
பின்அன்(பு) உருகிப் பெருந்தகை நந்தியுந்
தன்அன்(பு) எனக்கே தலைநின்ற வாறே”                         பாடல் எண் 274
​
என்ன பேசி என்ன பயன்? அன்பால் அகம் குழைந்து மனம் உருக ஆண்டவனை வணங்குங்கள். முதலில் அகம் குழைய அவன் அருளைப் பெற முயலுங்கள். அதன்படி நான் அன்பு செலுத்திய பேரறிவாளனாகிய நந்தியெம்பெருமான் தன்னுடைய அருளை, அன்பை எனக்குத் தந்துதவ, நான் அவன் அடியவன் ஆனேன்.

Picture
அன்புருவாகி அகம் இடம் கொண்டான்
“தானொரு காலம் சுயம்புவென் றேத்தினும்
வானொரு காலம் வழித்துணை யாய்நிற்கும்
தேனொரு பால்திகழ் கொன்றை அணிசிவன்
தானொரு வண்ணம்என் அன்பில்நின் றானே”                                         பாடல் எண் 275

சிவபெருமான் உருவம், அருவம், அருஉருவம் ஆகிய மூன்றும் கடந்த முழு முதல் பொருள். இப்படிப்பட்ட சிவனை ஒரு காலத்தில் சுயம்புவாகத் (தானாக) என்று போற்றி வணங்கினாலும் வானுலகில் இருந்து வழிபடுபவர்களுக்கு ஒரு சமயம் துணை புரிந்து அருளுவான். தேன் போன்ற உமையவள் ஒரு பாகத்தில் இருக்கக் கொன்றை மாலை சூடிய சிவபெருமான் எனக்கு அன்புருவாகி என் அன்பில் கலந்து நின்றான்.

அகிலம் படைத்து அன்பையும் படைத்தான்
“முன்படைத்(து) இன்பம் படைத்த முதலிடை
அன்படைத்(து) எம்பெரு மானை அறிகிலார்
வன்படைத்(து) இந்த அகலிடம் வாழ்வினில்
அன்படைத் தான்தன் அகலிடத் தானே”                          பாடல் எண் 276

மனித உயிர்களைப் படைப்பதற்கு முன்பாக இவ்வுலகைப் படைத்து, இதில் எல்லா வகை இன்பங்களையும் படைத்தருளிய முழு முதல் பொருளாகிய இறைவனிடம் அன்பு செலுத்தி, அவன் அருளைப் பெற அறியாதவர்கள், அழியும் இந்த உலக வாழ்வு நிலையானதென்று நம்பி, அதையே உறுதியாகப் பற்றி நிற்கின்றனர். என்றாலும் அன்பைப் படைத்த பெருமானே உலகம் எங்கும் பரவியுள்ள நிலையான பொருளாவான்.

வேண்டினார்க்கு வேண்டியது அருளுவான்
“கருத்துறு செம்பொன்செய் காய்கதிர்ச் சோதி
இருத்தியும் வைத்தும் இறைவ என்(று) ஏத்தியும்
அருத்தியுள் ஈசனை யாரருள் வேண்டில்
விருத்தி கொடுத்திடும் விண்ணவர் கோனே”                      பாடல் எண் 277

இறைவன் உருக்கிய செம்பொன் ஒளி வீசுவது போல அன்பர் மனக் கோயிலிலே சோதிச் சுடர் ஒளியாய்த் திகழ்கின்றான். அவனை நினைவில் நிறுத்தியும், நெஞ்சில் வைத்தும், போற்றித் துதித்து, உள்ளன்போடு யார் வேண்டினாலும், அவர்களுக்கு வளமான வாழ்வைத் தருவான்.

இறைவனை நாடா இரு வினையாளர்
“நித்தலும் துஞ்சும் பிறப்பையும் செய்தவன்
வைத்த பரிசுஅறிந் தேயும் மனிதர்கள்
இச்சையுளே வைப்பர் எந்தை பிரான்என்று
நச்சியே அண்ணலை நாடுகி லாரே”                              பாடல் எண் 278

உலகில் உயிர்கள் தினமும் பிறக்கின்றன, இறக்கின்றன. தோற்றத்தையும் மறைவையும் தொழில்படச் செய்பவன் இறைவன். உயிர்கள் அவை செய்த வினைகளுக்குப் பரிசாக இந்தப் பிறப்பும் தொடர்கின்றது. இதை அறிந்த பின்பும், மனிதர்கள் உலக வாழ்விலேயே ஆசை வைத்து அலைகிறார்களே! எம் இறைவா! எமக்கருள்வாய் என்று விருப்போடு அவன் துணையைத் தேடி அடைய நினையா திருக்கிறார்களே!

அன்பு செய்வார்க்கு அணை துணை
“அன்பின் உள்ளான் புறத்தான் உடலாயுள்ளான்
முன்பின் உள்ளான் முனிவர்க்கும் பிரானவன்
அன்பின் உள்ளாகி அமரும் அரும்பொருள்
அன்பின் உள்ளார்க்கே அணை துணையாமே”.                                           பாடல் எண் 279

இறைவனை எண்ணி அன்பு செய்பவர்களின் உள்ளத்தில் இறைவன் இருக்கின்றான். வெளியிலும் இருக்கின்றான். ஆன்மாக்களின் உடலாக உள்ளவனும் அவனே. உலகத் தோற்றத்திற்கு முன்பும் இருந்தவன், பின்பும் இருப்பவன். தவமுனிவர்களுக்குத் தலைவன். அன்புடையவர்களுக்கு என்றும் நீங்காத் துணையாக நின்றருளுபவனும் அப்பரம்பொருளாகிய சிவமே ஆகும்.

அன்பு செய்வாரை அறிவன் சிவன்
“இகழ்ந்ததும் பெற்றதும் ஈசன் அறியும்
உகந்தருள் செய்திடும் உத்தம நாதன்
கொழுந்தன்பு செய்துஅருள் கூரவல் லார்க்கு
மகிழ்ந்தன்பு செய்யும் அருள்அது வாமே”                         பாடல் எண் 280

இறைவன் படைத்த உயிர்கள்தான் அனைத்தும். என்றாலும் இவற்றில் சில அவனிடம் அன்பு கொள்ளாமல் இருப்பதையும், சில உயிர்கள் அன்பு செலுத்தி அவன் அருளைப் பெற்றதையும் ஈசன் அறிவான். இதற்கேற்பவே அவன் தன் அருளை விரும்பி வழங்குவான். தன்னிடம் தலையாய அன்பு கொண்டவர்க்கு அவன் மிகுந்த மகிழ்ச்சியோடு அருள் செய்வான். இறையருள் தன்மை அது.
​​
இந்தப் பக்கம் best free website hit counterதடவை பார்வையிடப்பட்டுள்ளது.
0 Comments



Leave a Reply.

    சைவசித்தாந்த ரத்தினம்
    ​நாகேந்திரம் கருணாநிதி

     

    பதிவுகள்​

    April 2025
    March 2025
    January 2025
    June 2024
    April 2024
    August 2023
    November 2022
    July 2022
    March 2022
    February 2022
    December 2020
    November 2020
    March 2020
    February 2020

    அனைத்துப் பதிவுகள்

    ALL

  • நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
  • மயிலிட்டி செய்திகள்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வு
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல்கள் 2021
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பிறந்தநாள்
  • காணிக்கை மாதா தேவாலயம்
Powered by Create your own unique website with customizable templates.