மயிலிட்டி
  Myliddy.org
  • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
  • மயிலிட்டி செய்திகள்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வு
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல்கள் 2021
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பிறந்தநாள்

சிறப்புடன் நடைபெற்ற மயிலிட்டி மாதர் சங்கத்தின் ஆண்டுவிழா!

3/1/2020

0 Comments

 
Picture
​மயிலிட்டித்துறை வடக்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் (யாழ்/251) முதலாம் ஆண்டு நிறைவு விழா இன்று வெள்ளிக்கிழமை சிறப்புடன் நடைபெற்றுள்ளது.

​வலி வடக்கு பிரதேச செயலாளர் சண்முகராசா சிவஶ்ரீ அவர்கள் பிரதம விருந்தினராக பங்கேற்று சிறப்பித்த இந்நிகழ்வானது இன்று நண்பகல் 2.30 மணியளவில் பிரதம அதிதி உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்புடன் ஆரம்பித்திருந்தது.

மயிலிட்டித்துறை வடக்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் அண்ணாத்துரை கமலினி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக வலிவடக்கு பிரதேச செயலகத்தின் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் சுந்தரலிங்கம் அன்றூ மற்றும் தெல்லிப்பளை சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கி முகாமையாளர் தேவராசா விக்கினேஸ்வரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

வலிவடக்கு பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான த.சுதாஜினி மற்றும் நிசாந்தினி, மயிலிட்டித்துறை வடக்கு யாழ்/251 கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் கா.துவாரகன், ஒபர் சிலோன் யாழ்ப்பாண இணைப்பாளர் பே.ரொனி, மயிலிட்டித்துறை வடக்கு யாழ்/251 அபிவிருத்தி உத்தியோகத்தர் க.வீரசிவாகரன், வலிவடக்கு பிரதேச செயலகத்தின் கைத்தொழில் அபிவிருத்தி உத்தியோகத்தர் தே.லட்சுமி ஆகியோருடன்,  மயிலிட்டி சமூக மட்ட அமைப்புகளைச் சேர்ந்த சு.றசியசிங்கம், ம.மரியரட்ணம், வீ.செல்லக்கதிரமலை, ஐ.உருத்திரமூர்த்தி மற்றும் இரா.மயூதரன் ஆகியோரும் கௌரவ விருந்தினர்களாகவும் பங்கேற்று சிறப்பித்திருந்தனர்.

வலிகாமம் வடக்கை ஆக்கிரமித்து 1990 இல் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை காரணமாக 27 ஆண்டுகள் இடம்பெயர்ந்து பல்வேறு இடங்களில் ஏதிலிகளாக வாழ்ந்து வந்த நிலையில் தற்போது மீள்குடியேறியுள்ள மயிலிட்டித்துறை வடக்கு பகுதியைச் சேர்ந்த பெண்களை உள்ளடக்கி கடந்த 12/12/2018 அன்று உருவாக்கப்படிருந்த மயிலிட்டித்துறை வடக்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் முதலாம் ஆண்டு நிறைவு நிகழ்வு நடாத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தி, படங்கள் இரா. மயூதரன்

இந்தப் பக்கம் free counterதடவை பார்வையிடப்பட்டுள்ளது.
0 Comments



Leave a Reply.

    மயிலிட்டி செய்திகள்

     

    பதிவுகள்

    August 2021
    March 2021
    February 2021
    January 2021
    December 2020
    November 2020
    January 2020

    முழுப்பதிவுகள்

    All

Picture
நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்
hit counter
Copyright © 2023