
அண்மை நாட்களில் பெய்துவரும் கனத்த மழை காரணமாகவும் அசாதாரண புயல் காரணமாகவும் மயிலிட்டி கடற்கரை பகுதி பாரிய கடலரிப்புக்குட்பட்டு காணப்படுகிறது.1990ம் ஆண்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து பின்னர் 2017ம் ஆண்டு மீள்குடியேற்றத்தின் பின்பு மயிலிட்டி கடற்கரையோரத்தை அண்டி பலர் வீடுகளை நிரமாணித்து தமது பாரம்பரிய தொழிலான மீன்பிடித்தொழிலை செய்துவரும் நிலையில் கடந்த நாட்களாக வீசி வரும் புயல் மற்றும் பலத்த மழை காரணமாக கடல் அலையின் வீச்சு அதிகரித்த தன்மையினால் மயிலிட்டி கிராமத்தின் கடற்கரை ஓரப் பகுதி முழுவதுமாக கடல் அரிப்புக்கு உட்பட்டு காணப்படுகின்றது.