அண்மை நாட்களில் பெய்துவரும் கனத்த மழை காரணமாகவும் அசாதாரண புயல் காரணமாகவும் மயிலிட்டி கடற்கரை பகுதி பாரிய கடலரிப்புக்குட்பட்டு காணப்படுகிறது.1990ம் ஆண்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து பின்னர் 2017ம் ஆண்டு மீள்குடியேற்றத்தின் பின்பு மயிலிட்டி கடற்கரையோரத்தை அண்டி பலர் வீடுகளை நிரமாணித்து தமது பாரம்பரிய தொழிலான மீன்பிடித்தொழிலை செய்துவரும் நிலையில் கடந்த நாட்களாக வீசி வரும் புயல் மற்றும் பலத்த மழை காரணமாக கடல் அலையின் வீச்சு அதிகரித்த தன்மையினால் மயிலிட்டி கிராமத்தின் கடற்கரை ஓரப் பகுதி முழுவதுமாக கடல் அரிப்புக்கு உட்பட்டு காணப்படுகின்றது.
சக்கோட்டைமுதல் பருத்தித்துறை வரை கடற்கரையோரத்தில் கட்டப்பட்டுள்ள கடல்பாதுகாப்பு அணை போல எமது கிராமத்திற்கும் கடல் அணைகட்டி எமது கிராமத்தை கடல் அரிப்பில் இருந்து பாதுகாக்க வேண்டியது இன்றைய அனைவரும் கட்டாய தேவையான காணப்படுகின்றது.
மயிலிட்டி துறைமுகத்தில் எமது உள்ளுர் மீனவர்களின் வள்ளங்கள் மற்றும் சிறிய படகுகள் தரித்து நிற்பதற்குத் தேவையான போதுமான துறைமுக வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்காத காரணத்தினால் பலத்த காற்று மற்றும் கனத்த மழை போன்றவற்றால் எமது மீனவர்களின் சிறிய படகுகள் மற்றும் வள்ளங்கள் பலத்த சேதத்துக்கு அண்மைய நாட்களில் உட்பட்டு வருகின்றமையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
மயிலிட்டி உறவுகள் மீளக்குடியமர்ந்து அரசாங்கத்தின் 10இலட்சம் ரூபாவுடன் தாம் வைத்திருந்த பணம் மற்றும் வங்கிகளில் இருந்து எடுத்த கடன்கள் போன்றவற்றினை கொண்டு தமது வீடுகளை நிர்மாணித்திருந்த நிலையில் அவர்களது ஜீவனோபாய தொழிலான கடற்தொழிலை செய்வதற்கான உபகரணங்களையும் பாரிய கடன் சுமைகள் மத்தியில் பெற்று தமது அன்றாட வாழக்கைத்தொழிலை நடத்தி வரும் நிலையில் தற்போது காணப்படும் அசாதாரண இயற்கை சூழ்நிலை காரணமாக பல படகுகள் நாளுக்குநாள் சேதங்களை சந்தித்து வருகின்றது. இதனால் எமது உறவுகளின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மயிலிட்டி துறைமுகம் முகாமையாளர் ஐ தொடர்பு கொண்டு கேட்டபோது மயிலிட்டி துறைமுகத்தில் இரண்டாம் கட்ட வேலைகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என்றும் இது ஆரம்பிக்கப்பட இருந்த நிலையில் கொரோனா நோய் காரணமாக கொழும்பில் இருந்து இங்கு வந்து களப் பணிகள் மற்றும் ஆய்வுகளை செய்வதற்கு முடியாத தன்மை காரணமாகவ இந்த நிலைமை தொடர்ச்சியாக சாதகமற்ற தன்மையில் காணப்படுவாதாக தெரிவித்திருந்தார்.
இதையடுத்து மயிலிட்டி கடற்றொழிலாளர் சமாச தலைவருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது இந்த துறைசார்ந்த அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களிடம் பலவிதமான
பல மனுக்களை கையளித்திருந்த நிலையிலும் இன்றுவரை எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என குறிப்பிட்டிருந்தார் அத்துடன் பிரதேச சபை உறுப்பினர் மற்றும் கிராம அபிவிருத்தி அமைப்புக்களின் உறுப்பினர்கள் உடனும் தொடர்பு கொண்டு கலந்துரையாடியிருந்தேன் எனவே சமூக அமைப்புகள் அனைவரும் இந்த பிரச்சினை தொடர்பில் மீளவும் கவனம் செலுத்தி இந்த அத்தியாவசிய பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கு நாம் அனைவரும் நம்மாலான ஒத்துழைப்புக்களை வழங்கி எமது மயிலிட்டியை பாதுகாப்பதற்கு ஒன்றுபடுவோமாக.
பொருளாளர்,
ச.வசந்தராஜ்,
மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியம்.

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.