• நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
  • மயிலிட்டி செய்திகள்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வு
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல்கள் 2021
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பிறந்தநாள்
  • காணிக்கை மாதா தேவாலயம்
Myliddy.org
மயிலிட்டி

கட்டுவன் மயிலிட்டி வீதியில் புளியடி பாலத்தினை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.

17/3/2021

0 Comments

 
Picture
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கிராமப்புற 5000 பாலங்கள் நிர்மாணித்தல் உள்கட்டமைப்பு வசதிகளை கட்டியெழுப்பும் செயற்திட்டத்தில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் (பா.உ) கோரிக்கைக்கு அமைய தெல்லிப்பளை பிரதேச செயலகத்துக்குட்பட்ட கட்டுவன் - மயிலிட்டி வீதியையும் புளியடி கோவில் வீதியையும் இணைக்கும் புளியடி பாலத்தினை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 16/03/2021 செவ்வாய்க்கிழமை மாலை 3 மணியளவில் இடம்பெற்றது.

​இந்த பாலம் 5.4 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டலில் பிரதம விருந்தினராக அங்கஜன் இரமநாதன் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைத்ததுடன் வலிகாமம் வடக்கு பிரதேச செயலர் ச.சிவசிஸ்ரீ, பிரதேச சபை தவிசாளர் எஸ்.சுகிர்தன் , வீதி அபிவிருத்தி அதிகார சபை மாவட்ட பொறியியலார் மற்றும் அதிகாரிகள், அப்பகுதி பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதேவேளை கட்டுவன் மயிலிட்டி வீதியில் மேலும் 3 பாலங்கள் புனரமைப்பு செய்யப்படவுள்ளது. மயிலிட்டி சந்திக்கு அண்மையுள்ள பாலங்கள், மற்றும் கட்டுவன் கிராமக்கோட்டு சந்திக்கு அருகில் சேதமடைந்துள்ள பாலம் என்பன புனரமைப்பு செய்யப்படவுள்ளது.

அத்துடன் அங்கஜன் இராமநாதனின் கோரிக்கையில் மயிலிட்டி சந்தியில் இருந்து யாழ்ப்பாணம் விமான நிலையம் வரையான வீதியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பித்துள்ளன. இது காப்பெட் வீதியாக புனரமைப்புச் செய்யப்படவுள்ளது.

இங்கு மீள்குடியேற்றம் தொடர்பில் கருத்து தெரிவித்த அங்கஜன் இராமநாதன் மக்களது மீள்குடியேற்றம் தொடர்பில் வலியுத்தப்பட்டு வருகின்றன. மக்களது காணிகள் விடுவிக்கப்படவேண்டும். நானும் வலி.வடக்கை சேர்ந்தவன். இந்த கட்டுவன்-மயிலிட்டி வீதியில் உள்ள 400 மீற்றர் வீதி கட்டாயம் விடுவிக்க வேண்டும். இதுதொடர்பில் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திலும் பேசப்பட்டது, சம்பந்தப்பட்ட அமைச்சுக்கு கூட இந்த வீதி பிரச்சினை விளக்கமளிக்கப்பட்டது. ஜனாதிபதிக்கு கூட இது தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியில் விமான நிலையத்துக்கு மாற்றும்போதே வீதியை திறக்கவில்லை பாதுகாப்பு பிரச்சினை என்ற காரணத்தை கூறினார்கள். இப்போதும் அதேபிரச்சினையை கூறிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் நாம் அவர்களுக்கு போக்குவரத்துக்காக இந்த வீதியை கட்டாயம் திறந்துவிடவேண்டும் என கூறிக்கொண்டிருக்கின்றோம். பஸ் போக்குவரத்து, விமான நிலையத்துக்குமான இலகுவான வீதியாக உள்ளது.

​நாளை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க யாழ்ப்பாணம் வரவுள்ளார் அவருக்கு இந்த பிரச்சினையை எடுத்துக்கூறவுள்ளேன் என்றார்.

செய்தி, படங்கள்: S.Nirujan
இந்தப் பக்கம் website counter தடவை பார்வையிடப்பட்டுள்ளது.
0 Comments



Leave a Reply.

    மயிலிட்டி செய்திகள்

     

    பதிவுகள்

    March 2025
    August 2021
    March 2021
    February 2021
    January 2021
    December 2020
    November 2020
    January 2020

    முழுப்பதிவுகள்

    ALL

  • நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
  • மயிலிட்டி செய்திகள்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வு
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல்கள் 2021
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பிறந்தநாள்
  • காணிக்கை மாதா தேவாலயம்
Powered by Create your own unique website with customizable templates.