![]()
முடக்கப்பட்ட பகுதிக்குள் நிவாரணப்பணி வழங்கிவைப்பு.
பாதுகாப்பு அனுமதியோடு விரைந்தது மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றிய நிவாரண குழு.
அண்மையில் கொரோணா தொற்று அதிகரிப்பு காரணமாக முடக்கப்பட்ட பருத்தித்துறை நகரின் முக்கிய பகுதியில் நிர்வாகத்தால் தெரிவு செய்யப்பட்ட ஐம்பது குடும்பங்களுக்கு அண்மையில் திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியத்திய நிவாரண குழுவினர் பாதுகாப்பு அனுமதியோடு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைத்தனர்.
இந்த பணியில் திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றிய உறுப்பினர்கள் கலந்து கொண்டதோடு அவரவர் வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்கியமை குறிப்பிடத்தக்கது. இவ் மனிதாபிமான பணிக்கான நிதிஉதவியான 50 000/- ரூபாவினை கனடா வாழ் மயிலிட்டி உறவான வேதநாயகம் அன்ரன் ஜோர்ஜ் அவர்கள் அன்பளிப்பாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு எமது நிர்வாகம் சார்பில் மனமார்ந்த நன்றியறிதலை தெரிவித்துக்கொள்கின்றோம். அத்துடன் ஏனைய அனைத்து ஒத்துழைப்பாளர்களுக்கும் பணியில் ஈடுபட்ட நிவாரண குழுவினருக்கும் இளைஞர் ஒன்றியத்தின் சார்பில் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றோம். நன்றி வணக்கம்! நிர்வாகம் திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியம் மயிலிட்டி.
இந்தப் பக்கம்
0 Comments
Leave a Reply. |
மயிலிட்டி செய்திகள்
பதிவுகள்
August 2021
முழுப்பதிவுகள் |