மயிலிட்டி
  Myliddy.org
  • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
  • மயிலிட்டி செய்திகள்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வு
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல்கள் 2021
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பிறந்தநாள்

ஆயிரம் தலைவாங்கும் அரக்கன் - இயற்கை நடத்தும் உயிரியல் போர் -  சங்கீதா தேன்கிளி

31/3/2020

0 Comments

 
Picture
ஆயிரம் தலைவாங்கும் அரக்கன்

எதுவும் கனவில்லை
உலகம் நகர்ந்து கொண்டுதானிருக்கிறது
நாம் வாழ்ந்து கொண்டுதானிருக்கிறோம்

உயிர்ப்பறவையை
நெஞ்சுக் கூட்டுக்குள் பத்திரப்படுத்தி
அது பறந்துவிடாமலிருக்க
எத்தனங்களை செய்கிறோம்.
காலம் அதுபோக்கில் கடக்கிறது
ஆயிரம் தலைவாங்கும் அரக்கனிடம்
எம்மை ஒப்படைத்துவிட்டு,

ஆறடி மனிதனை அரைநொடிக்குள்
காணாமலாக்குகிறான் அவன்
வல்லரசுகளின் வயிறு கிழித்து
ஓலமிட வைக்கிறான்
எஞ்சியவர்களை அஞ்சிநடுங்கி
அலறவிடுகிறான்

அச்சம் அரைஉயிர் தின்ன
மிச்ச உயிரையேனும் பிடித்து வைக்க
ஆலாய் பறக்கிறான் மனிதன்
காலம் அதுபோக்கில் கடக்கிறது
ஆயிரம் தலைவாங்கும் அரக்கனிடம்
எம்மை ஒப்படைத்துவிட்டு.

​இயற்கை நடத்தும் உயிரியல் போர்

கனவுகளிலும் காணக்கிடையாது
ஊகிப்புகளுக்கு அப்பாற்பட்டது
மலைகுடைந்து வாழ்ந்த மனிதனை
அதே கற்சிறைக்குள் பூட்டுகிறது
நிறமில்லா சிறு உயிரி
விலையில்லா பேருயிர்களை உண்டு
கொண்டாடுகிறது..

இறுமாப்புடன் உலவியவர்களை
இரங்க வைக்கிறது
மனிதம் மறந்தவர்களை
மன்னிப்பு கேட்க வைக்கிறது
மனித உயிர் தின்று
களிக்கிறது ஓருயிரி...

இயற்கை தன்னை நிலைநிறுத்த
தொடுத்தது இந்த உயிரியல் போர்
மானிடம் மறைவில் பதுக்கி
பூமி தன்னை செதுக்குகிறது
காற்று தன்னை புதுப்பிக்கின்றது
பறவைகள் விலங்குகள்
சுதந்திரத்தை சுவாசிக்ககன்றன..
மனிதனுக்கு மனிதம் உணர்த்தி
இயற்கை தன்னை நிலைநிறுத்த
தொடுத்தது இந்த உயிரியல் போர்

​
  • சங்கீதா தேன்கிளி
​
இந்தப் பக்கம் hit counter தடவை பார்வையிடப்பட்டுள்ளது.
0 Comments



Leave a Reply.

    சங்கீதா தேன்கிளி

    மயிலிட்டி

    பதிவுகள்

    January 2023
    March 2020

    அனைத்துப் பதிவுகள்

    All

Picture
நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்
hit counter
Copyright © 2023