மயிலிட்டி
  Myliddy.org
  • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
  • மயிலிட்டி செய்திகள்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வு
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல்கள் 2021
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பிறந்தநாள்

எம் ஊருக்கான ஒரு சமூகநலக்கூடம் - பொன்னையா மலரவன்

29/1/2023

0 Comments

 
Picture
தொண்ணூறுகள் வரை மயிலிட்டியில், குறிப்பாக மாதாகோயில் வட்டாரத்தில் வாழ்ந்து, பின் இடம் பெயர்ந்து பல்வேறு நாடுகளிலும், உள்நாட்டிலே யே பல்வேறு பகுதிகளிலும் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கும் எமது வாழ்நாள் வேணவாக்களில் ஒன்று, விரைவில் ஈடேறவுள்ளடதாக நாம் எல்லோரும் அறிகிறோம்.

கோயில்வளவு மற்றும் எமது பாடசாலைச் சுற்றுவட்டார நிலம், இராணுவத்தின் ஆளுகையிலிருந்து மீண்டும் ஊர்மக்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக அறியப்படுகிறது. இச்சந்தர்ப்பத்தில், கோயில்வளவு சுற்றுவட்டாரம், என்ன வழிகளில் தன்னுடை ய பங்களிப்பை எமது ஊருக்கு வழங்கியது என்ற எனது புரிதலில் இருந்து, ஒரு வேண்டுகோளை இங்கே பதிவிடுகிறே ன்.

அதற்குமுன், எம்மூர் மண்ணின் விடுவிப்பிற்காகத் தன்னலமின்றி உழைத்த அத்துணை நல் ஆன்மாக்களையும் வணங்குகிறே ன்.

கோயில்வளவின் மை யமாக இருந்த மாதாகோயில் ஒரு கிறிஸ்துவ தேவாலயமாக இருந்தபோதும், ஊர் மக்களிடமிருந்து, சமயங்களைத் தாண்டிய பங்களிப்பு அக்கோயிலின் நடவடிக்கைகளுக்கு இருந்ததென்பது, அப்போதிருந்த யாவரும் அறிந்ததே.

இதை விட முக்கியமாக, அருகிருந்த 'றோமன்' கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மற்றும் கோயில்வளவு மூலமாக,
பெரும்பாலான ஊர்மக்கள், வேறுபாடுகளின்றி பயன் பெற்றிருக்கிறோம். அதில் நானும் ஒருவன். முக்கியமாக எனது வீட்டைத்தாண்டிய, சமூக ஒன்றுகூடலுக்கான முதலாவது தளமாக அது இருந்தது. கோயில்வளவிற்கான காணிகள் முழுமையாக விடுவிக்கப்பட்டால், எம்மூரின் எதிர்கால நலன் கருதி, ஒரு சமூகநலக்கூடம், பொருத்தமான ஒரு பகுதியில், நீண்டகால நோக்குடன் கட்டப்பட வேண்டுமென்ற வேண்டுகோளை, சம்பந்தப்பட்ட அமைப்பினரிடம் மிகவும் தாழ்மையுடன் முன்வைக்கிறேன்.

மேற்படி 'சமூகநலக்கூடம்' முக்கியமாக கலை, விளையாட்டு மற்றும் சமூக நிகழ்வுகளுக்கான பகுதிகளை உள்ளடக்கியதாகவும் கோயிலிற்கான நியாயமான, நிரந்தரமான வருமானத்தை ஈட்டுவதாகவும் திட்டமிடப்படுதல் நன்மை பயக்குமெனவும் நம்புகிறே ன்.

அத்துடன் புலம்பெயர் தேசங்களிலுள்ள எமது சந்தததியினர், எம்மூரிலுள்ள சந்ததியினருடன் உறவைப்பேணி, ஊரின் மேம்பாட்டிற்குப் பங்களிப்பதற்கும் மேற்படி சமூகநலக்கூடத்தின் மூலம் நடைபெறும் நிகழ்வுகள் நிச்சயமாக ஒரு வாய்ப்பாக அமை யும் என்பதும் உறுதியானதாகும்.

தீமையிலும் ஒரு நன்மை என்றெண்ணி, தரை மட்டமாக்கப்பட்ட எமது நிலத்தை, எம்மூரின் எதிர்கால நலனிற்காகத் திட்டமிட்டு மீளுருவாக்குவதற்கான அடிக்கல்லை நாட்டுவது இப்போது செயற்படப்போகும் எமது கைகளிலேயே உள்ளது.

நன்றி
பொன்னையா மலரவன்.
​

இந்தப் பக்கம் hit counterதடவை பார்வையிடப்பட்டுள்ளது.
0 Comments



Leave a Reply.

    பொன்னையா மலரவன்

    மயிலிட்டி

    பதிவுகள்

    January 2023

    முழுப்பதிவுகள்

    All

Picture
நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்
hit counter
Copyright © 2023