மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியத்தின் 3ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றிய சனசமூக நிலைய கட்டடத்திறப்பு விழா கடந்த 31.10.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணியளவில் மிகவும் கோலகலமாக நடைபெற்றது.
காலை 8.30 மணியளவில் பேச்சியம்மன் ஆலயத்தில் சிறப்புப் பூசை வழிபாடுகள் நடைபெற்று 9.00மணியளவில் படம் எடுத்து வரப்பட்டு பிரதம விருந்தினர்கள் மாணவர்கள் ஊர் மக்கள் அனைவரையும் பேச்சியம்மன் ஆலயத்திலிருந்து மங்கள இசை வாத்தியங்களின் அணிவகுப்புடன் வரவேற்று சுபநேரத்தில் சனசமூக நிலையம் திறந்து வைக்கப்பட்டது. பின்னர் மாணவச் செல்வங்களின் கலை கலாசார நிகழ்வுகளுடன் சுமார் 11.00 மணியளவில் நிகழ்வுகள் இனிதே நிறைவு பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வலிவடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ.சுகிர்தன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக மயிலிட்டித்துறை வடக்கு கிராம அலுவலர் கா.துவாரகன்மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் க.வீரசிவகரன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ் கல்வி நிலைய மற்றும் சனசமூக நிலையத்திற்கான தளபாடங்கள் கொள்வனவு செய்வதற்கான
நிதிக்குரிய கோரிக்கை நிர்வாகத்தால் கடந்த மாதங்களில் எமது பொதுக்குழுமத்தில் பதிவிடப்பட்டிருந்தது.
எமது கோரிக்கைக்கிணங்க பல உறவுகள் தங்கள் பங்களிப்பினை வழங்கியிருக்கின்றனர்.
மேலும் ஆலய வழிபாட்டினை உரிய நேரத்தில் ஒழுங்குபடுத்தி தந்த ஞானவேல் அண்ணன் அவர்களுக்கும் போட்டோ எடிட்டிங்கு உதவிய உருத்திரமூர்த்தி கவிந்தன் அவர்களுக்கும் திறப்புவிழாவிற்கான கலை நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தி உதவிய திருப்பூர் கல்வி நிலைய ஆசிரியர்களுக்கும் மற்றும் எமது மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றிய சனசமூக நிலைய கட்டட கட்டுமாணத்திற்கு இரவுபகலாக வியர்வை சிந்நிய உள்ளூர் உறவுகளுக்கும் ஆலோசனைகள் மற்றும் அனைத்து விதத்திலும் உதவிகளை வழங்கிய புலம்பெயர் உறவுகளுக்கும் தங்களது வேலைப்பழுக்களையும் பொருட்படுத்தாது இரவு பகலாக சனசமூக நிலைய பிரசவிப்பிற்காக உழைத்த நிர்வாக உறுப்பினர்களுக்கும் சனசமூக நிலைய திறப்புவிழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த எமது உறவுகளுக்கும் திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியத்தின் சார்பில் கோடான கோடி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
"கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. "
நன்றி:
நிர்வாகம்,
மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியம்.

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.