அருணாசலம் தந்த அரும்பெரும் புதல்வனே
அளவில்லா அன்புதனை தினமீர்க்கும் முதல்வனே
எந்தையாய் நின்று தினம் வழிகாட்டி நின்றாய்
எம் தந்தையர் போல் யாருமில்லை என பெருமிதம் கொண்டோம்....
அளவில்லா அன்புதனை தினமீர்க்கும் முதல்வனே
எந்தையாய் நின்று தினம் வழிகாட்டி நின்றாய்
எம் தந்தையர் போல் யாருமில்லை என பெருமிதம் கொண்டோம்....
காலக்கொடூரனின் காலப்பிரிவினையால்
ஊர்க்குருவிகள் சிதறி எட்டுத்திக்கும் பறந்தன நிலையில்லாத வாழ்வினால், உறவுகள் அனைத்தும் நிலைகுலைந்து நின்றன. ஏற்ற இறக்கங்கள் அனைத்தையும் நீக்கி அன்பெனும் நேர்கோட்டில் ஒன்றிணைத்து அழகாக அனைத்தையும் நேராக்கி கானகம் ஆளும் சிங்கம் போல் தலைநிமிர்ந்து நின்றாயே குணபாலா.... நாம் என்ன தவம் செய்தோம் தலைமகனாய் உங்களைப்பெற - இங்கு தனிமையில் நின்று வாடுகின்றோம் உங்களை இழந்து. உறுதியாக வேர்விட்ட ஆலமரம் நீவிர் கள்ளமில்லா கொள்ளைச்சிரிப்பில் ஆயிரம் அர்த்தங்கள் புதையுண்டு போயிருக்கும் காலம் கொடுத்தது உங்களுடன் அமர்ந்து அளவளாவ சில மணித்துளிகள் மணித்துளிகள் சிலதானாலும் மணிமணியாய் நீங்கள் சொன்ன வார்த்தைகள் எழுத்தை செதுக்கும் நேரம்கூட என் நெஞ்சில் சிலையாய் அழகுறுகின்றது.. வெள்ளைத்தாடி, நீண்ட ஆறடி உயரம், இம்மியளவும் பிசகாமல் தனக்கேயுரிய பாணியில் கச்சிதமாக கட்டிய வேஸ்டி கள்ளமில்லா வெள்ளை உள்ளம்போல் வெள்ளை உடுத்தி நடமாடும் பாங்கு கூனிக்குறுகாத தலை நிமிர்வான ராஜ நடை ஓடி ஓடி ஊருக்காக நடந்த கால்கள் நேர்த்தியாக கணித்து காய்நகர்த்திய மதிநுட்பம்........ இன்னும் எத்தனை ............. பதினொரு துறைகளில் தன்னை நிலைநிறுத்திய ஆகப்பெரும் ஆளுமை நினைத்ததை நேர்த்தியாகவும், நியாயமாகவும் கண்ணெதிரே பேசும் ஆற்றல் கனகச்சிதமாக திட்டமிடும் பேராற்றல் அனைத்தும் இன்று அமைதியாய் ஆனதோ... ஆழ்கடல் வற்றி களையிழந்து போனதோ.... ஊரையே உம்தோழில் சுமந்தாய் வழிகாட்டியாக முன்னேறி நடந்தாய் ஊர்கூடி தேர் இழுத்தால் திருவிழாவாம் - ஆனால் ஊரையே கூட்டி முன்னின்று நீ இழுத்தாய் பெருவிழாவாய் வந்தது மீள்குடியேறல் குடும்ப சுமைகள் ஒருபக்கம், அன்பு மனைவி மறுபக்கம், அன்புக்கணவனாய் அனைத்தையும் தந்தாய் கூடவே நின்று பணிவிடைகள் செய்தாய் உறவில் இழப்புக்கள் கண்டும் நீங்கள் ஈடாடவில்லை. சமூக நலன், ஊர் மறுமலர்ச்சி என அனைத்திற்கும் சமமான முக்கியத்துவம் சுயநலம் கொண்ட ஓர் பேதமை இல்லை இத்தனைக்கும் மத்தியிலும் சோர்வில்லா ஓட்டம் அப்பப்பப்பா............. விட்டுக்கொடுப்புக்கள் இல்லை விலைபோதல்கள் இருந்ததில்லை நெத்தியடியாக உண்மைகள் மட்டுமே பொறியாகப்பறந்தன அனைத்தையும் செய்தாய் அன்று அமரராய் ஆனாய் இன்று உம் ஆளுமை சொல்ல எம் ஆயுளும் நீளும் நீங்கள் இல்லா இடம் மட்டும் தனியாக வாடும் கனவுகள் அனைத்தும் நீங்காது போக பெரியப்பா உங்கள் தடம் மாறாத வழிதனில் இரைதேடும் ஈசல்கள் போல உங்கள் நினைவுகளோடு நாங்கள்........ மயிலை மகன் (மகிபாலன்- மதீஸ்) |
இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.