![]()
நட்பறிய, நலம் விசாரிக்க,
அல்லது எங்கிருக்கிறீர்கள் என தெரியாமல் கூட தூர தேசம்மொன்றில் சுகமாக வாழ்ந்தபடி... நீங்களும்தான் இருந்திருப்பீர்கள்... கொஞ்சிக்குலாவ குழந்தைகளும் இருந்திருக்கும், மக்கள் மனங்களில் வைத்தியர்களாக, தாதியர்களாக, ஆசிரியர்களாக, பொறுப்பான குடும்ப பெற்றோர்களாக, சமூகத்தை தாங்கிநிற்கும் ஏதோவொரு சிறுதுரும்பாகவேனும், நீங்களும்தான் இருந்திருப்பீர்கள்...
நிலையில்லா வாழ்வுதனை
நிலைகுலைந்து வாழ்வதற்கும், வாழ்ந்து சலிப்பதற்கும் உங்களுக்கும் கிட்டவில்லை, உம் நினைவுகளை தவிர உம்மோடு கதைபேச எங்களுக்கும் எட்டவில்லை. வெள்ளைச்சீருடைகள் செந்தணல் ஆனதென்ன கொடுங்கோல் ஆட்சியினால் கொள்ளைவந்து சேர்ந்ததென்ன.. வல்லூறு வானிரைந்து அனல் கக்கி போனதனால், வருங்கால வசந்தங்கள் வானவில் ஆனதென்ன.. நெடுங்கால கனவுகள் நிலையிழந்து போனதென்ன... மீளவராது உம்மோடு பழகிய நிஜமான காலங்கள்.. உம் சுவாசங்களால் நிலைத்திருக்கும் நீர் விட்டுச்சென்ற கோலங்கள்.......... நினைவுகளுடன் உங்களின் நான் மதீஸ்
இந்தப் பக்கம்
0 Comments
Leave a Reply. |
மகிபாலன் மதீஸ்
|