• நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
  • மயிலிட்டி செய்திகள்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வு
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல்கள் 2021
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பிறந்தநாள்
  • காணிக்கை மாதா தேவாலயம்
Myliddy.org
மயிலிட்டி

மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றிய சனசமூக நிலைத்துடன் இணைந்த கல்வி நிலைய திறப்புவிழா

16/5/2025

0 Comments

 
Picture
​மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றிய சனசமுக நிலையத்துடன் இணைந்த கல்வி நிலைய கட்டடம் திறப்புவிழா.

அனைத்துலக திருப்பூர் மக்களின் நிதிப்பங்களிப்பிலே உருவான இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கல்விக்கூடத்தை வடமாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு மயிலிட்டி திருப்பூர் மண்ணிலே திறந்து வைத்தார்.

  • திருப்பூர் ஒன்றிய கல்வி நிலையம்
  • திருப்பூர் ஒன்றிய சனசமூக நிலையம்
  • திருப்பூர் ஒன்றிய கணினிக்கூடம்
  • திருப்பூர் ஒன்றிய கலையரங்கம்
  • திருப்பூர் ஒன்றிய விளையாட்டுக் கழகம்
  • திருப்பூர் ஒன்றிய முன்பள்ளி

என ஊருக்குத் தேவையான அத்தனை அம்சங்களுடனும் மயிலிட்டி மக்களுக்காக உதயமாகியுள்ளது.
நாங்கள் இந்தப் பகுதிகளை விட்டு இடம்பெயராமல் இருந்திருந்தால் இன்று நாம் எங்கேயோ முன்னேறிச் சென்றிருப்போம். அதைக் கற்பனை செய்து பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கின்றது. இடப்பெயர்வின் வலி உங்களைப்போல எனக்கும் நன்றாகவே தெரியும். நானும் உங்களைப்போன்று இடம்பெயர்ந்து சென்ற ஒருவன்தான் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றிய சனசமூக நிலையத்துடன் இணைந்த கல்வி நிலைய கட்டடத் திறப்பு விழா மயிலிட்டி சனசமூக நிலைய வீதியில் இன்று திங்கட் கிழமை (12.05.2025) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகப் பங்கேற்ற ஆளுநர், தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து கட்டடத்தை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்ததுடன், பெயர்பலகையையும் திரைநீக்கம் செய்து வைத்தார். அதன் பின்னர் இடம்பெற்ற மேடை நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர் தெரிவித்ததாவது,

தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் உதவி அரசாங்க அதிபராக நான் கடமையாற்றியிருக்கின்றேன். 1996ஆம் ஆண்டு நாம் இங்கு வந்தபோது இடம்பெயராமல் தங்கியிருந்த தையிட்டி மக்கள் சிலரை இராணுவத்தினருடன் வந்து நான் பார்வையிட்டிருந்தேன். அப்போது மயிலிட்டி உள்ளிட்ட இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வீடுகள் அனைத்தும் நல்ல நிலையில் இருந்ததை நான் நேரடியாகக் கண்டிருந்தேன். 2015ஆம் ஆண்டு மாவட்டச் செயலராக யாழ். மாவட்டத்துக்கு நான் வந்த பின்னர் மயிலிட்டிப் பகுதியை வந்து பார்வையிட்டபோது அதிர்ச்சியாகவும் கவலையாகவும் இருந்தது. நல்ல நிலையில் இருந்த வீடுகள் பலவும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டிருந்தன.

2015ஆம் ஆண்டு மாவட்டச் செயலராக நான் வரும்போது மாவிட்டபுரம் சந்தி வரையிலேயே முழுமையாக விடுவிக்கப்பட்டிருந்தன. அதன் பின்னர் படிப்படியாக இங்கே மீள்குடியேற்றம் நடைபெற்றது. அன்றைய காலத்தில் யாழ். மாவட்ட இராணுவத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கா, தர்சன ஹெட்டியாராச்சி ஆகியோர் மீள்குடியமர்வு செயற்பாட்டுக்கு முழுமையாக ஒத்துழைத்திருந்தார்கள். அவர்கள் இன்னும் சில காலம் இருந்திருந்தால் மேலும் பல காணிகளை எம்மால் விடுவித்திருக்க முடியும்.

காணிகளை விடுவிக்கும்போது மகேஸ் சேனநாயக்க சொல்வார், நீங்கள் அடுத்த வாரமும் எங்களிடம் வருவீர்கள். அடுத்த காணிகளை விடுவிக்கக் கோருவீர்கள் என்று நகைச்சுவையாகச் சொல்வார். அப்படித்தான் இந்தக் காணி விடுவிப்புக்களைச் செய்தோம். மாவட்டச் செயலராக இருந்தபோது என்னுடன் மிகச் சிறந்த அணி இருந்தது. அப்போது யாழ். மாவட்டச் செயலகத்தில் மேலதிக மாவட்டச் செயலர் - காணி – பணியாற்றிய முரளிதரன் மற்றும் இந்தப் பகுதி பிரதேச செயலர்களாக இருந்த சிறிமோகன், சிவசிறி ஆகியோரும் என்னுடன் இராணுவத்தினருடன் கலந்துரையாட வருவார்கள். அடிக்கடி இராணுவத்தினரைச் சந்தித்து காணி விடுவிப்புக்கான கோரிக்கையை முன்வைத்தே இவற்றைச் சாத்தியமாக்கியிருந்தோம்.

தற்போது இங்கு வரும்போது இந்தப் பகுதிகளைப் பார்வையிடும்போது மிக்க மகிழ்ச்சியாக இருக்கின்றது. வீடுகளை அமைத்து கட்டடங்களை அமைத்து முன்னேறியிருக்கின்றீர்கள். உங்கள் கிராமத்தை வளர்ச்சியடையச் செய்திருக்கின்றீர்கள்.

நிகழ்வின் தலைவர் தனது உரையில் பல கோரிக்கைகளை முன்வைத்திருந்தார். நான் அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே இந்தப் பகுதிக்கான ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.ஸ்ரீபவாணந்தராஜாவுடன் பேசிக் கொண்டிருந்தேன். விரைவில் விசேட கலந்துரையாடலை ஒழுங்குபடுத்தி உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித்தருவோம், என்றார்.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் வலி. வடக்கு பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான எஸ்.ஸ்ரீபவாணந்தராஜா, நீண்ட காலம் மூடப்பட்டிருந்த பலாலி வீதி திறக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டியதுடன் காணி விடுவிப்புத் தொடர்பில் பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்தார்.

கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்ட வலி.வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சோ.சுகிர்தன், இந்தப் பிரதேச மக்களின் காணிகள் விடுவிக்கப்படவேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிகழ்வில் பரீட்சைகளில் சித்தியடைந்த மாணவர்கள் விருந்தினர்களால் கௌரவிக்கப்பட்டனர். மேலும், திருப்பூர் இளைஞர் நன்பணி ஒன்றிய கட்டடம் 3 கோடி ரூபாவுக்கும் அதிகமாக நிதியில் கட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
​
வடக்கு மாகாண ஆளுநர் ஊடகப் பிரிவு
12.05.2025
www.np.gov.lk
www.npgov.lk
#Northern #provence #Honorable #Governors #vethanayhan #todaynews
​

"நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை" - மகிபாலன் மதீஸ் 

​​
மாபெரும் தவம் ஒன்றை

தோளினில் சுமந்து

புலம்பெயர் வாழ்வின் வலிகளை 

முகர்ந்து

எனியும் வேண்டாம் எம் சந்ததிக்கு

இது போல வாழ்வென்று

எண்ணித்துணிந்த கருமம் இன்று

மலைபோல வானுயர்ந்து

ஊரின்புகழ் பறைசாற்ற

பெருமிதமே தாம் எமக்கு


திமிர் அல்ல இது....... 

உணர்வோடு கூடிய உரிமை

விதையொன்று வெடிக்காமல் 

மரமொன்று இங்கில்லை, 

வலிகளை சுமக்காமல் 

வாழ்வதில் பயனில்லை. 

எண்ணத்தை எழுதலாம் இங்கு, 

என்னத்தை நானெழுத.... 

வில்வித்தை தான்கற்க

துரோணர் பலம்வேண்டும்

எண்ணம், சிந்தனை அனைத்தையும்

ஒன்றாக்கின் 

அகிலத்தை வெல்லலாம் 

ஏகலைவன் போல....... 

கல்வி கற்பது

விழலுக்கு இறைப்பதல்ல... 

கல்விச்சாலையும்

தெய்வீக வழிபாடும்

மானிட இனத்தையே

மாண்பாக மாற்றும்..... 

போர்கழத்தின் மத்தியிலும் 

புதுரோஜா யார்தடுத்தாலும் பூக்கும்.....

மயிலை மண்ணிலே 

சரஸ்வதிக்கே சரணாலயம்

அமைக்க சிரமங்கள், எதிர்ப்புகள், அனைத்தையும் தாண்டி, கொள்கைமாறாது நின்று உழைத்த இளைஞர் ஒன்றிய உறுப்பினர்கள், 

ஆலோசனை வழங்கிய பெரியவர்கள், மற்றும் அனைத்து வழிகளிலும் தமது திரள்நிதி பங்களிப்புகளை வழங்கிய அனைத்துலக மயிலை உறவுகளுக்கும் அனைத்தையும் அமைதியாக நடாத்தும் எம் தாயவளின் ஆசிவேண்டி

வாழ்த்துகளுடன் எனது நன்றிகள். 

(திறப்புவிழா நிகழ்ச்சிகள், ஒழுங்குபடுத்தல்கள் சிறப்பு) 

மகிபாலன் மதீஸ் 
​​
Visit counter For Websites
0 Comments



Leave a Reply.

    Picture

    மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியம்


    ஒன்றித்து உயர்வோம்
    ​

    பதிவுகள்

    May 2025
    January 2025
    November 2021

    அனைத்துப் பதிவுகள்

    ALL

  • நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
  • மயிலிட்டி செய்திகள்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வு
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல்கள் 2021
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பிறந்தநாள்
  • காணிக்கை மாதா தேவாலயம்
Powered by Create your own unique website with customizable templates.