மயிலிட்டி திருப்பூர் ஒன்றிய மக்களின் நிதியுதவியில், இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மலையக மாணவர்களுக்கெனத் தொகுக்கப்பட்ட கற்றல் உபகரணங்கள் அடங்கிய நிவாரணப் பொதிகள், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக, கண்டி மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர் லலித் பண்டார அவர்களிடம் 10/12/2025 புதன்கிழமை இரவு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.